Tuesday, November 9, 2010

Nallathoor Veenai Seithae Bharathiyar Paadal Varigal | நல்லதோர் வீணை செய்தே வரிகள்

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுன்டோ

சொல்லடி சிவசக்தி - என்னை
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி -

நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையூ

விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கேதும் தடயுள்ளதோ


---------------------------------------------------------

Nalladhoar veenai seydhae - adhai
nalangedap puzhudhiyil erivadhundoa


solladi sivasakthi - enai
chudarmigum arivudan padaiththuvittaay
vallamai thaaraayoa - indha
maanilam payanura vaazhvadharkae
solladi sivasakthi - nilach
chumaiyena vaazhndhidap puriguvaiyoa


visaiyurup pandhinaip poal - ullam
vaendiyapadi seyyum udal kaettaen
nasaiyaru manam kaettaen - niththam
navamenach chudar tharum uyir kaettaen...uyir kaettaen...uyir kaettaen
thasaiyinaith theechchudinum - siva
sakthiyaip paadum nallagam kaettaen
asaivuru madhi kaettaen - ivai
arulvadhil unakkedhum thadaiyuladhoa

Tuesday, October 19, 2010

தமிழுக்கு அமுதென்று பேர் பாடல் வரிகள்

தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்.
தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நிர்
தமிழுக்கு மணமென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த உர்
தமிழுக்கு மதுவென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் உரிமை செம்பயிருக்கு வேர்
பயிருக்கு வேர் .

தமிழ் எங்கள் இளமைக்கு பால்
ஆஆஆஆஆஆஆஆஆ
தமிழ் எங்கள் இளமைக்கு பால்
இன்பத்தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்
புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வாண்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்
சுடர் தந்த தேன்



தமிழ் எங்கள் அறிவுக்கு தோல்
இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாழ்
வயிரத்தின் வாழ்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்


----இது ஒரு சிறிய முயற்சி.ஏதானும் தவறு இருந்தால் மன்னிக்கவும்

Sunday, October 17, 2010

தமிழ் செம்மொழி | இயற்கையின் மொழி | உயிர்களின் மொழி | உணர்வுகளின் வெளிப்பாடு

தமிழ் இது வெறும் மொழி மட்டும் அல்ல .நமது உணர்வுகளை வெளிபடுத்த உதவும் ஒரு கருவியும் கூட.இயற்க்கையோடு மிக அதிகமாக தொடர்புடைய மொழிகளில் நமது தமிழ் மொழியும் ஒன்று .கல் தோன்றா காலம் முதல் இன்றைய தகவல் தொழில் நுட்ப காலம் வரை வளர்ந்து வந்த நமது செம்மொழியின் பெருமை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் .தமிழ் பேசுவதையே அவமானமாக நினைக்கும் மக்கள் இன்று நமது தமிழ் நாட்டிலே மிக அதிகம் .இந்த நிலை நீடிக்க நாம் அனுமதிக்கலாமா.உலக மொழிகளில் மிக முக்கியமான 20 மொழிகளில் தமிழும் ஒன்று .தமிழிற்கு வயதில்லை ஆனால் உயிருண்டு .தமிழை வளர்த்தவர்கள் யாருமில்லை தமிழால் வளர்ந்தவர்கள் ,வாழ்க்கை பெற்றவர்கள் என்று ஏராளம் உண்டு .இப்படிப்பட்ட தமிழ் மொழியின் பாதத்தில் ஒரு மணல் பகுதியாக இந்த இணையத்தளம் சமர்ப்பணம் .